பங்குச் சந்தை நிலவரம்!

வெள்ளி, 14 நவம்பர் 2008 (10:46 IST)
மும்பை:பங்குச் சந்தைகளில் இன்றும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. ஆனால் வர்த்தகம் நடக்கும் போது பங்குகளை விற்பனை செய்ததால் குறியீட்டு எண்கள் குறைய துவங்கின.

இன்று காலை பங்குச் சந்தைகளில் 10.05 மணியளவில் நிஃப்டி 76.50, சென்செக்ஸ் 237.88 புள்ளிகள் அதிகரித்தது.

பங்குச் சந்தையில் குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று விடுமுறை.


அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று குறியீட்டு எண்கள் அதிகரித்தன. டோவ் ஜோன்ஸ் 552.59, நாஸ்டாக் 97.49, எஸ் அண்ட் பி 500-58.99 புள்ளிகள் அதிகரித்தன.

இதே போல் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் நேற்று, ஆஸ்திரேலியா, பிரிட்டன் தவிர மற்றவைகளில் குறீயீட்டு எண்கள் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-12.81 புள்ளிகள் குறைந்தது.

மொத்த விலை குறியிட்டு எண்ணை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும் பணவீக்கம் ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு முதன் முறையாக நவம்பர் 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.98 விழுக்காடாக குறைந்துள்ளது.

அத்துடன் ஆகஸ்ட் மாதத்தில் குறைந்திருந்த தொழில் துறை உற்பத்தி செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. இது 4.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இவை சாதகமான அம்சங்கள். அத்துடன் இன்று ஆசிய நாடுகளில் எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இருப்பினும் பங்குச் சந்தைகளில் அடிக்கடி மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 31.90 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 2880.35 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 70.48 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 9,606.41 ஆக இருந்தது.

இதே போல் மிட் கேப் 13.64, சுமால் கேப் 27.06, பி.எஸ்.இ. 500- 22.31 புள்ளிகள் அதிகரித்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் ஹாங்காங்கினஹாங்செங் 418.41, ஜப்பானின் நிக்கி 289.33, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 31.90, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 6.35, சீனாவின் சாங்காய் காம்போசிட் 23.19 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.21 மணியளவில் 915 பங்குகளின் விலை அதிகரித்தும், 476 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 48 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் புதன் கிழமை ரூ. 735.14 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.215.48 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்