டாலர் மதிப்பு 16 பைசா சரிவு!

வெள்ளி, 17 அக்டோபர் 2008 (13:22 IST)
மும்பை: அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று 16 பைசா அதிகரித்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொ
ங்கும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 பைசா அதிகரித்தது, 1 டாலர் ரூ. 48.67/68 பைசா என்ற அளவில் விற்பனையானது. இது நேற்றைய இறுதி நிலவரத்துடன் ஒப்பிடுகையில் டாலரின் மதிப்பு குறைந்து ரூபாயின் மதிப்பு 16 பைசா அதிகரித்தது.

பிறகு வர்த்தகம் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ. 48.70/48.71 என்ற அளவில் விற்பனையானது. காலை 11 மணியளவில் மீண்டும் குறைந்து 1 டாலரின் விலை ரூ. 48.67/68 என்ற அளவு இருந்தது.

இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 16 பைசா அதிகம்.

நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 48.83/48.84 பைசா.

பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், பிறகு சரிய துவங்கின. பங்குச் சந்தே ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால், அதன் பிரதிபலிப்பு அந்நியச் செலவாணி சந்தையிலும் எதிரொலிக்கிறது.

அதே நேரத்தில் இன்று பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 2 டாலர் அதிகரித்தது. நேற்று கடந்த ஒரு வருடத்தில் முதன் முறையாக 1 பீப்பாய் விலை 70 டாலருக்கும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலரின் மதிப்பு ரூ.48.68 பைசா.
1 யூரோ மதிப்பு ரூ.65.70
100 யென் மதிப்பு ரூ.48.01
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.84.37.

வெப்துனியாவைப் படிக்கவும்