பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

வெள்ளி, 17 அக்டோபர் 2008 (10:56 IST)
மும்பை:பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்து இருந்தன. ஆனால் அதிக அளவு ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இதே நிலை தொடரும் என்று தெரிகிறது.

காலை 10.10 மணியளவில் நிஃப்டி 55.10, சென்செக்ஸ் 163.95 புள்ளிகள் அதிகரித்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று சாதகமான நிலை இருந்தது. டோவ் ஜோன்ஸ் 401.35, நாஸ்டாக் 89.38 புள்ளிகள் அதிகரித்தன.

ஆனால் ஐரோப்பிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளும் சரிவையே சந்தித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-218.20 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.36 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 10.70 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3280.00 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 15.05 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 10,596.55 ஆக குறைந்தது.

இதே போல் மிட் கேப் 18.44 சுமால் கேப் 27.34, பி.எஸ்.இ. 500- 05.57 புள்ளிகள் குறைந்தன.

இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் சீனா, ஜப்பான், சிங்கப்பூர் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

ஆனால் ஹாங்காங்கின் ஹாங்செங் 04.97, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 16.70 புள்ளிகள் குறைந்தன.

சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 9.77, ஜப்பானின் நிக்கி 140.05, சீனாவின் சாங்காய் காம்போசிட் 23.66 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.52 மணியளவில் 1106 பங்குகளின் விலை அதிகரித்தும், 768 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 59 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று 1,160.63 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 737.77 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நேற்று பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், பங்குச் சந்தையின் சரிவை தடுத்து நிறுத்த சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று தெரிகிறது.
.

வெப்துனியாவைப் படிக்கவும்