மும்பை: மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.50 அதிகரித்தது. ஆனால் பார் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.755 சரிந்தது.
அயல் நாட்டு சந்தையில் தங்கம், வெள்ளி விலை குறைந்தது. லண்டனில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 837.00/838.50 டாலராக குறைந்தது. முந்தைய நாள் விலை 839.00/840.50 டாலர்.
பார் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 10.25/10.30 டாலராக குறைந்தது. நேற்றைய விலை 10.45/10.46 டாலர்.
இன்றைய விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,310 22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,250 பார் வெள்ளி கிலோ: ரூ.18,530.