பங்குச் சந்தைகளில் சரிவு!

வியாழன், 16 அக்டோபர் 2008 (10:31 IST)
மும்பை:பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

காலை 10 மணியளவில் நிஃப்டி 168.20, சென்செக்ஸ் 558.32 புள்ளிகள் சரிந்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 733.08, நாஸ்டாக் 150.68, எஸ் அண்ட் பி 500-90.17 புள்ளிகள் குறைந்தன.

இதே போல் ஐரோப்பிய நாடுகளின் எல்லா பங்குச் சந்தைகளும் சரிவையே சந்தித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-314.62 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அரசுகளும், ரிசர்வ் வங்கிகளும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் இவை எந்த பலனையும் அளிக்க ஆரம்பிக்கவில்லை.

காலை 10.25 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 147.65 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3190.75 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 479.84 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 10,329.28 ஆக குறைந்தது.

இதே போல் மிட் கேப் 152.64, சுமால் கேப் 156.46, பி.எஸ்.இ. 500- 171.21 புள்ளிகள் குறைந்தன.

இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. ஹாங்காங்கினஹாங்செங் 1,213,74, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 137.57, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 112.58, ஜப்பானின் நிக்கி 949.25, சீனாவின் சாங்காய் காம்போசிட் 73.38 புள்ளிகள் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.28 மணியளவில் 251 பங்குகளின் விலை அதிகரித்தும், 1419 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 40 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று 1,030.79 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 669.96 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நேற்று பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், பங்குச் சந்தையின் சரிவை தடுத்து நிறுத்த சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இதன் தாக்கம் இன்று சிறிதளவும் இல்லை. இரண்டு பங்குச் சந்தைகளும் தொடர்ந்து சரிவை சந்தித்து கொண்டுள்ளது. .

வெப்துனியாவைப் படிக்கவும்