சென்செக்ஸ் 801-நிஃப்டி 234 புள்ளி சரிவு!

வெள்ளி, 10 அக்டோபர் 2008 (17:39 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிக அளவு குறியீட்டு எண்கள் சரிந்தன.

ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் எடுத்த அவசர நடவடிக்கையால், பங்குச் சந்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் இது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

இன்று நாள் முழுவதும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 800.51 (7.07%) புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 10,527.85 ஆக குறைந்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 334.48 (8.34%), சுமால் கேப் 343.74 (7.31%), பி.எஸ்.இ 500- 317.73 (7.47%) புள்ளிகள் சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 233.70 (6.65%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3279.95 ஆக குறைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் காலையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.

ரியல் எஸ்டேட் 11.30%, உலோக உற்பத்தி பிரிவு 9.25% , நுகர்வோர் பொருட்கள் 9.22%, தகவல் தொழில் நுட்பம் 4.33%, வங்கி 7.84%, தொழில் நுட்பம் 10.11%, மின் உற்பத்தி 8.80%, பெட்ரோலிய நிறுவனங்கள் 6.72%, பொதுத்துறை நிறுவனங்கள் 4.47%, வாகன உற்பத்தி 5.43% குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 382 பங்குகளின் விலை அதிகரித்தது. 2189 பங்குகளின் விலை குறைந்தது. 48 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்