பங்குச் சந்தையில் கடும் சரிவு!

திங்கள், 15 செப்டம்பர் 2008 (11:34 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு பங்கு விலைகளும் கடுமையாக சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 14 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது. அதே போல் நிஃப்டி 4 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது.

பங்குச் சந்தைகளில் பங்குகளை விற்பனை செய்யும் போக்கு அதிக அளவு இருந்தது. இதன் பாதிப்பால் காலையில் அந்நியச் செலாவணி சந்தையில், டாலரின் மதிப்பு அதிகரித்தது, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. 1 டாலரின் மதிப்பு ரூ.46 ஆக உயர்ந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் ஜப்பான், தென் கொரியா தவிர மற்றவைகள் சரிவை சந்தித்தன.

காலை 11.10 மணிக்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 702.78 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,298.78 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 226.40 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4002.05 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 293.15, சுமால் கேப் 324.16, பி.எஸ்.இ. 500- 283.73 புள்ளி குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 11.07 மணியளவில் 206 பங்குகளின் விலைகள் அதிகரித்தது. 1968 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 32 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.















வெப்துனியாவைப் படிக்கவும்