தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் சரிந்தன.
ஆசிய நாடுகளின் பங்குச் சந்தை உட்பட மற்ற நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தது.
மத்திய அரசு நேற்று ஆகஸ்ட் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கான பணவீக்கம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த வாரத்தில் பணவீக்கம் 12.34 விழுக்காடாக உள்ளது.
பணவீக்கத்தை அளவிடும் மொத்த விலை குறியீட்டு எண் அட்டவணையில் பழங்கள், காய்கறி போன்ற அழுகும் பொருட்களின் விலை மட்டும் குறைந்துள்ளது. தொழில் துறைக்கு தேவையான பொருட்களின் விலை குறையவில்லை.
இத்துடன் கச்சா எண்ணெய் விலை 107 டாலராக உள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் பேச்சு வார்த்தை போன்ற காரணங்களினால் பங்குச் சந்தையில் பாதிப்பு இருப்பதாக தெரிகிறது.
காலை 10.27 மணிக்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 326.45 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,572.65 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 85.80 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4362.25 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 47.61, சுமால் கேப் 30.89, பி.எஸ்.இ. 500- 99.28 புள்ளி குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் 492 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1135 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 53 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
இன்று ஆசிய நாடுகளில் எல்லா பங்குச்சந்தைகளிலும் பாதகமான நிலை இருந்தது.
சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 50.71, சீனாவின் சாங்காய் காம்போசிட் 54.73, ஜப்பானின் நிக்கி 379.79, ஹாங்காங்கின் ஹாங்செங் 636.83, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 16.17, தைவான் வெயிட் 116.03 பிலிப்பைன்சின் பி.எஸ்.இ காம்போசிட் 29.33 புள்ளி குறைந்தது.