தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் சரிந்தன.
ஆசிய நாடுகளின் பங்குச் சந்தை உட்பட மற்ற நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலிலும் எதிரொலித்தது. அத்துடன் இன்று பணவீக்கம் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும். பணவீக்கம் 12.44 விழுக்காடாக அதிகரிக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
காலை 10.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் (Sensex) 256.15 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,793.71 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி ((Nifty) 80.15 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4423.85 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 37.85, சுமால் கேப் 27.23, பி.எஸ்.இ. 500- 82.66 புள்ளி குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் 726 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1,032 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 50 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
இன்று ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸ் தவிர மற்ற பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது.
சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 51.51, சீனாவின் சாங்காய் காம்போசிட் 22.41, ஜப்பானின் நிக்கி (Nikki) 114.99, ஹாங்காங்கின் ஹாங்செங் 164.61, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 5.97, தைவான் வெயிட் 185.72 புள்ளி குறைந்தது.
பிலிப்பைன்சின் பி.எஸ்.இ காம்போசிட் மட்டும் 4.02 புள்ளி அதிகரித்தது.