அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 5 பைசா உயர்ந்துள்ளது.
நேற்று அன்னியச் செலாவணி சந்தை முடிவின் போது ரூ.43/78 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது ரூ.43.73/74 ஆக உயர்ந்தது.
பங்குச்சந்தையில் இன்று காணப்படும் கடும் ஏற்றமே இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதற்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் உயர்வதில் சிக்கல் ஏற்படும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த வார துவக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 44.26 டாலராக சரிந்தது. இதுவே கடந்த 17 மாதத்தில் ஏற்பட்ட மிக பெரிய சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.