தங்கம், வெள்ளி விலை உயர்வு!

வியாழன், 22 மே 2008 (14:26 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.220ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.740ம் அதிகரித்தது.

ல‌ண்டன் மற்றும் ஆசிய நாட்டு சந்தைகளிலும் தொடர்ந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற அரிய உலோகங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 930.10/ 932.50 டாலராக அதிகரித்தது. இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 18 டாலரை தாண்டியது. 1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலை 18.10/ 18.12 டாலராக உயர்ந்தது. .

லண்டனில் இருந்தும், ஆசிய நாடுகளின் சந்தைகளில் இருந்தும் வந்த தகவல்களையடுத்து, மும்பையில் அதிக அளவு தங்கம், வெள்ளி வாங்குகின்றனர். இதனால் விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.13,080
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.13,020
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.25,450

வெப்துனியாவைப் படிக்கவும்