பங்குச் சந்தை சென்செக்ஸ் 489 புள்ளி சரிவு!

வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (18:17 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைந்த குறியீட்டு எண்கள், இறுதிவரை தொடர்ந்து குறைந்தன.

பணவீக்கம் 7 விழுக்காடாக அதிகரித்ததாக வந்த தகவலால், வட்டி விகிதம் குறையும் என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்தனர். கடந்த மூன்று நாட்களாக அதிகரித்து வந்த குறியீட்டு எண்கள் இன்று சரிந்தன. முதலீட்டு நிறுவனங்கள், வாகன உற்பத்தி, பெட்ரோலிய நிறுவனங்கள், வங்கி, ரியல் எஸ்டேட், இயந்திர உற்பத்தி ஆகிய நிறுவனங்களின் பங்குகளை அதிக அளவு விற்பனை செய்தனர்.

இதனால் இன்று காலை முதல் மாலை வர்த்தகம் முடியும் வரை எல்லா பிரிவிலும் உள்ள பங்குகளின் விலைகளும் குறைந்தது.


மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இறுதியில் 489.43 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,343.12 ஆக குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 124.60 புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 4647.00 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 125.30, மிட் கேப் 124.38, பி.எஸ்.இ. 500- 158.11 புள்ளிகள் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 189.55, பாங்க் நிஃப்டி 200.95 சி.என்.எக்ஸ். ஐ.டி.81.10, சி.என்.எக்ஸ்.100-117.80, சி.என்.எக்ஸ். 500-92.35, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 124.90, சி.என்.எக்ஸ். மிட் கேப்50 - 58.70, சி.என்.எக்ஸ். டிப்டி 106.90 புள்ளிகள் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 808 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,823 பங்குகளின் விலை குறைந்தது, 66 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

ரியல் எஸ்டேட் 0.2.34%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 2.06%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 2.37%, தொழில்நுட்ப பிரிவு 2.65%, உலோக உற்பத்தி பிரிவு 1.09 %, வாகன உற்பத்தி பிரிவு 2.50%, வங்கி பிரிவு 2.05%, மின் உற்பத்தி பிரிவு 2.99%, பொதுத்துறை நிறுவனங்கள் 2.34%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 4.50% குறைந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்