மும்பையில் தங்கம் விலை ரூ.275 குறைந்தது!

செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (15:49 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையிலஇன்றதங்கத்தினவிலை 10 கிராமிற்கரூ.275ம், வெள்ளியின் விலை கிலோவுக்கரூ.1,020ம் குறைந்துள்ளது.

ஆனால், நியூயார்க் சந்தையில் அவுன்ஸ் 916.20/917 டாலராக இருந்த தங்கத்தின் விலை இன்று 920.50/921.25 டாலராக அதிகரித்துள்ளது. அதேபோல், அவுன்ஸ் 17.27/17.32 டாலராக இருந்த வெள்ளியின் விலை 17.33/17.38 டாலராக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூர் சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸ் 17.21/17.32 அமெரிக்க டாலரில் இருந்து 17.33/17.38 டாலராக அதிகரித்துள்ளது.

மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,905
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,850
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.22,605

வெப்துனியாவைப் படிக்கவும்