பங்குச் சந்தை சென்செக்ஸ் 71 புள்ளி சரிவு!

வியாழன், 27 மார்ச் 2008 (18:22 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைய துவங்கிய குறியீட்டு எண்கள், மதியம் சுமார் இரண்டரை மணிக்கு பிறகே சிறிது அதிகரிக்க துவங்கியது.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, அமெரிக்கா, ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் பாதிப்பு இருந்தது. காலையில் சிங்கப்பூர் குறியிட்டு எணகள் குறைந்தன. இது மதியத்திற்கு பிறகு அதிகரித்தது.

சீனாவின் சியோல் காம்போசிட் மேலும் அதிக அளவு குறைந்தது.

இதே போல் இந்திய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன. மாலையில் இறுதி நேரத்திலேயே சிறிது உயர துவங்கின. குறிப்பாக மும்பை பங்குச் சந்தையில் சுமால் கேப், மிட் கேப் பிரிவில் உள்ள பங்குகள் அதிகரித்தது.

இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 71.27 6 புள்ளிகள் குறைந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் 16,015.56 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 1.14 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 4,830.25 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 87.82, மிட் கேப் 5.23 புள்ளிகள் அதிகரித்தது. பி.எஸ்.இ. 500- 9.47 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 55, சி.என்.எக்ஸ். ஐ.டி 95.95, பாங்க் நிஃப்டி 151.60,சி.என்.எக்ஸ் 100-03.15, , சி.என்.எக்ஸ் 500-05.00,சி.என்.எக்ஸ் மிட் கேப் 23.30,சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-22.25 புள்ளிகள் குறைந்தன.
அதே நேரத்தில் சி.என்.எக்ஸ் டிப்டி 03.80 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1493 பங்குகளின் விலை அதிகரித்தது, 1223பங்குகளின் விலை குறைந்தது, 59 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் ரியல்எஸ்டேட் 2.28%
மின் உற்பத்தி பிரிவு 1.02%, உலோக உற்பத்தி பிரிவு 0.79% அதிகரித்தன.

பொதுத்துறை நிறுவனங்கள் 0.40%,தகவல் தொழில் நுட்ப பிரிவு 3.05%, வாகன உற்பத்தி பிரிவு 1.22%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.57%, தொழில்நுட்ப பிரிவு 0.88%, வங்கி பிரிவு 1.51%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.62% குறைந்தன.

இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 16 பங்குகளின் விலை அதிகரித்தது. 14 பங்குகளின் விலை குறைந்தது.

விலை அதிகரித்த பங்குகள் :

அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளவை அதிகரித்த விலை விவரம் :

1. ஏ.சி.சி. ரூ.819.15 (ரூ.01.80)
2. அம்புஜா சிமெண்ட் ரூ.122.70 (ரூ.00.55)
3. பார்தி ஏர்டெல் ரூ.824.65 (ரூ.21.55)
4. பி.ஹெச்.இ.எல். ரூ.1985.80 (ரூ.30.85)
5. சிப்லா ரூ.211.60 (ரூ.05.95)
6. டி.எல்.எப். ரூ.674.05 (ரூ.16.25)
7. கிராசிம் ரூ.2699.90 (ரூ.09.25)
8. ஹெச்.டி.எப்.சி. ரூ.2661.55 (ரூ01.20)
9. ஹின்டால்கோ ரூ.172.50 (ரூ.10.70)
10. ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.244.00 (ரூ.09.60)
11. ஐ.டி.சி. ரூ.200.05 (ரூ.04.95)
12. ஜெய்பிரா ரூ.231.25 (ரூ.05.20)
13. மகேந்திரா அண்ட் மகேந்திரா ரூ.686.30 (ரூ.06.25)
14. ஓ.என்.ஜி.சி. ரூ.1069.20 (ரூ.6.20)
15. ரிலையன்ஸ் கம்யூனி ரூ.538.05 (ரூ.11.95)
16. விப்ரோ ரூ.430.10 (ரூ.01.10)

விலை குறைந்த பங்குகள் :

அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளவை விலை குறைந்த விவரம் :

1. ஹெச்.டி.எப்.சி. வங்கி ரூ.1434.95 (ரூ.06.20)
2. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ரூ.834.55 (ரூ.08.70)
3. இன்போசியஸ் ரூ.1440.80 (ரூ.54.80)
4. எல்.அண்ட்.டி ரூ.2963.65 (ரூ.82.65)
5. மாருதி ரூ.837.15 (ரூ.08.20)
6. என்.டி.பி.சி. ரூ.196.65 (ரூ.00.10)
7. ரான்பாக்ஸி ரூ.435.65 (ரூ.12.45)
8. ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1286.40 (ரூ.11.25)
9. ரிலையன்ஸ் இன்டஸ ரூ.2275.00 (ரூ.23.70)
10. எஸ்.பி.ஐ. ரூ.1650.45 (ரூ.63.15)
11. டாடா மோட்டார்ஸ் ரூ.655.20 (ரூ.24.20)
12. டாடா ஸ்டீல் ரூ.654.80 (ரூ.03.05)
13. டி.சி.எஸ். ரூ.853.15 (ரூ.26.15)
14. சத்யம் ரூ.395.05 (ரூ.17.95)

வெப்துனியாவைப் படிக்கவும்