மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறைந்த குறியீட்டு எண்கள் தொடர்ந்து சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 17 ஆயிரத்திற்கும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5 ஆயிரத்திற்கும் குறைவாக சரிந்தது.
மத்திய அரசின் 2008-09 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், பங்குச் சந்தையில் இரண்டாம் நாளாக பாதகமான நிலையையே ஏற்படுத்தியது. அத்துடன் அந்நிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன.
முதலீட்டு நிறுவனங்களின் கவனம் தங்கம், பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஆகியவற்றின் மீது திரும்பியது. இவற்றின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்தது.
இன்று மாலை வர்த்தகம் முடிவடையும் போது, சென்செக்ஸ் வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தைவிட 900.84 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,677.88 ஆக குறைந்தது. பட்ஜெட்டிற்கு பிறகு இரண்டே நாட்களில் சென்செக்ஸ் 5 விழுக்காடுகளுக்கும் அதிகமாக குறைந்துள்ளது.
காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சென்செக்ஸ் 350 புள்ளிகள் குறைந்து இருந்தது. ஒரு நிலையில் 944.09 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 16,634.63 புள்ளிகளாக குறைந்தது.
சிறு முதலீட்டாளர்கள் உட்பட எல்லா தரப்பினரும் லாப கணக்கு பார்த்த காரணத்தினால் பங்குகளின் விலை அதிக அளவு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 270.50 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 4,953.00 ஆக குறைந்தது.
இன்று வங்கி,மின் உற்பத்தி,ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்கு விலை அதிக அளவு குறைந்தது. வங்கிகள் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பால், ஸ்டேட் வங்கி, பஞ்சாப் வங்கி உட்பட வங்கிகளின் பங்குவிலைகள் அதிக அளவு குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 389.78, மிட் கேப் 315.54, பி.எஸ்.இ 500-356.14 புள்ளிகள் குறைந்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் ரூ5,090 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனையாயின. வெள்ளிக் கிழமை ரூ.6,721.65 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை ஆகி இருந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 571.75, சி.என்.எக்ஸ் ஐ.டி 159.40, பாங்க் நிஃப்டி 640.90,சி.என்.எக்ஸ் 100-268.40 ,சி.என்.எக்ஸ் டிப்டி 271.25,சி.என்.எக்ஸ் 500-221.75, சி.என்.எக்ஸ் மிட் கேப் 270.75 சி.என்.எக்ஸ் மிட் கேப் 50 -111.80 புள்ளிகள் குறைந்தன.
வர்த்தக நேரம் மாற்றம்!
செயற்கைகோள் தொடர்பு தடைபடுவதால் நாளை முதல் 18 ந் தேதி வரை பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி காலை 9.55 மணி முதல் 11.45 வரையிலும், அதன் பிறகு நண்பகல் 12.30 மணி முதல் மாலை 4.15 வரை வர்த்தகம் நடைபெறும். (நண்பகல் 11.45 முதல் 12.30 வரை வர்த்தகம் நடைபெறாது).
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் 4 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 26 பங்குகளின் விலை குறைந்தது.