பங்குச் சந்தைகளில் சிறிது முன்னேற்றம்!

செவ்வாய், 22 ஜனவரி 2008 (12:25 IST)
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் துவங்கிய போது இருந்த நிலைமை சிறிது மாறியது.

வர்த்தகம் துவங்கிய பிறகு, காலை 11.15 மணியளவில் நேற்றைய இறுதி நிலவரத்தை விட மும்பை சென்செக்ஸ் 1,197.51 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 16,407.84 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 375.75 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 4,833.05 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 909.05, சுமால் கேப் 974.37, பி.எஸ்.இ-500 636.45 புள்ளிகள் குறைந்து இருந்தன.

தேசிய பங்குச் சந்தையில் பங்கு விலைகளில் நிஃப்டி ஜூனியர் 12.50 விழுக்காடு, சி.என்.எக்ஸ் ஐ.டி 5.12 விழுக்காடு, பாங்க் நிஃப்டி 6.09 விழுக்காடு, சி.என்.எக்ஸ் 1008.58 விழுக்காடு, டிப்டி 8 விழுக்காடு, சி.என்.எக்ஸ் 500 9.47 விழுக்காடு, மிட் கேப் 12.18 விழுக்காடு, மிட் கேப் 50 17.16 விழுக்காடு குறைந்து இருந்தது.

ச‌ர்வதேச ‌நிலவர‌ம் !

இந்தியாவில் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் பங்குச் சந்தைகள் அதிகளவு பாதிக்கப்படடன.

அமெரிக்க பங்குச் சந்தையின் டோவ் ஜோன் இன்டஸ்டிஸ்டிரிய‌ல் ஆவ்ரேஜ் 59.19 புள்ளிகளும், நாஸ்டாக் 6.88, எஸ்.அண்ட் பி-500 8.06 புள்ளிகள் குறைந்தன.

ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 752.89, ஹாங்காங்கின் ஹாங்சாங் 1,914.73, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 167.86 புள்ளிகள் குறைந்து இருந்தன.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசிய-பசிபிக் மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா உட்பட அந்நிய நாடுகளில் உள்ள எல்லா பங்குச் சந்தைகளிலும் (‌சி‌றிலங்கா தவிர) பங்கு விலைகள் குறைந்து இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்