மும்பை : தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

திங்கள், 3 டிசம்பர் 2007 (17:12 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.20-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.30-ம் அதிகரித்தது.

நியூயார்க் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தது. கடந்த 10 நாட்களாக விலை குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் சந்தையில் இன்று தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 786.20/786.80 டாலர். (வெள்ளிக் கிழமை விலை 1 அவுன்ஸ் 783.50/784.20 டாலர்). நவம்பர் 7 ந் தேதி தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 845.40 டாலராக இருந்தது.

வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 14.02/14.07 டாலர். (வெள்ளிக் கிழமை விலை 1 அவுன்ஸ் 13.96/14.01 டாலர்).

இன்றைய விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,175
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,125
பார் வெள்ளி 1 கிலோ ரூ.18,770.

வெப்துனியாவைப் படிக்கவும்