டாலர் மதிப்பில் மாற்றமில்லை!

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (19:54 IST)
ரிசர்வ் வங்கியின் தலையீட்டினால் ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு சரியாமல் காப்பாற்றப்பட்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் 1 டாலரின் மதிப்பு ரூ.39.16 பைசாவாக குறைந்தது. 1 டாலர் ரூ.39.27 இல் இருந்து ரூ.39.30 வரை வியாபாரம் நடந்தது.

அந்நிய செலாவணி முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவு டாலரை விற்பனை செய்தன. இதனால் டாலரின் விலை பெருமளவிற்கு குறைந்தது. இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு குறையாமல் இருக்கும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி தலையிட்டது. இதனால் இறுதியில் டாலரின் மதிப்பு குறையாமல் காப்பாற்றப்பட்டது.

இறுதியில் 1 டாலர் ரூ.39.30 என்ற அளவில் முடிந்தது.

இந்திய ரூபாய்க்கு நிகரான மற்ற நாட்டு செலவாணிகளின் மதிப்பு:

1 யூரோ ரூ.57.60
1 பவுன்ட் ரூ.82.50
100 ஜப்பான் யென் ரூ.34.80

வெப்துனியாவைப் படிக்கவும்