மஞ்சளுக்கு உடனே பணம்- விவசாயிகள் கோரிக்கை!

வியாழன், 23 அக்டோபர் 2008 (18:21 IST)
ஈரோடு : ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மஞ்சள் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு, மஞ்சளுக்கு உரிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று காலிங்கராயன் பாசன சபை வலியுறுத்தியுள்ளது.

இதன் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாசன சபை தலைவர் வி.எம்.வேலாயுதம் தலைமையில் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது.

இதில் காலிங்கராயன் பாசன வாய்க்கால் மேம்பாட்டு திட்டத்திற்கு நபார்டு வங்கி வழங்கியுள்ள ரூ.12 கோடி நிதியை பயன்படுத்தி தடுப்புச்சுவர் கட்டி வாகனங்கள் செல்ல பாதை அமைத்துக் கொடுக்கவேண்டும்.

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் விற்பனை செய்யயும் மஞ்சளுக்கு உரிய தொகை, கடந்த 6 மாதமாக வழங்கபடாமல் உள்ளது.

இந்த தொகையை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதிவு செய்யப்படாத கரும்பை, சர்க்கரை ஆலையின் அனுமதி பெறாமல் வெளியில் விற்பனை செய்யக் கூடாது என்ற அரசு உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

கரும்பு வெட்டுக் கூலி, லாரி வாடகை ஆகியவற்றை ஆலை நிர்வாகம் ஏற்றுக் கொண்டு கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.1500 வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்