பவானி நதி மாசுபடுவதை தடுக்க வலியுறுத்தல்!

வியாழன், 23 அக்டோபர் 2008 (11:30 IST)
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் பவானி நதியில் கலக்கின்றன. இதனால் குடிநீர் மாசுபடுவதுடன், நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு விவசாயமும் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

இதை தடுத்து பவானி நதியை காப்பாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த இயக்கத்தின் 20 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தலைவர் வெங்கட்ராமன் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பவானி நீர் மாசுபடுவதை தடுத்து, பவானி நதியை காப்பாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தலைவராக வெங்கட்ராமன், உதவித்தலைவராக ஆடிட்டர் ரவிச்சந்திரன், செயலாளராக வழக்கறிஞர் சாந்தமூர்த்தி, இணைச் செயலாளராக பழனிசாமி, பொருளாளராக மதனகோபால் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்