மேட்டூர் அணை நீர் வரத்து குறைந்தது!

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (18:11 IST)
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைநதது.

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் சென்ற வாரம் மழை பெய்ததால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்தது. சென்ற 6 ஆம் தேதி அணையின் நீர் மட்டம் 60 அடியை தாண்டியது.

இன்று அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. விநாடிக்கு 6,250 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணைக்கு தண்ணீர் வருவது குறைந்தாலும், காவிரி பாசன பகுதியின் விவசாய பணிக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்படவில்லை.

இன்று காலை அணையின் நீர் மட்டம் 59.55 அடியாக இருந்தது. இதன் அதிக பட்ச நீர் மட்டம் 120 அடி.

காவிரி பாசன பகுதி விவசாய பணிக்காக விநாடிக்கு 12,998 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இவை கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 102 கன அடி, வென்னாற்றில் 7,528, கல்லணை கால்வாயில் 1,804, கொள்ளிடம் கால்வாயில் 907 கன அடி வீதம் பிரித்து அனுப்பப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்