நாளை முதல் மீண்டும் மழை பெய்யும்!

புதன், 26 மார்ச் 2008 (17:47 IST)
நாளை (27ஆம் தேதி) முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை பொழிவு குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் பெரம்பலூர் மழை ராஜ் கூறியுள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகைக்கு தெற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் உள்ளது. வரும் 27ஆம் தேதி முதல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, கடலூர், பாண்டிச்சேரி உட்பட கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், பிற பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்யும் வாய்ப்பு உள்ளதாக மழை ராஜ் ஏற்கனவே கூறியிருந்தார்.

27ஆம் தேதி துவங்கும் மழை ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி வரை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதெனவும் மழை ராஜ் தெரிவித்துள்ளார்.

தனது கணிப்பின்படி மார்ச் 20ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்படும் தேதியாக கூறியிருந்தார். ஆனால் மார்ச் 21ஆம் தேதி சீனாவில் 7.3 ரிக்டர் அளவிற்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மார்ச் 29 மற்றும் ஏப்ரல் மாதம் 8ம் தேதிகள் பலத்த நிலநடுக்கம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்