காங்கிரசுடன் கூட்டணி சேராதது தவறு: லாலு பிரசாத் யாதவ்

சனி, 16 மே 2009 (17:38 IST)
ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், மக்களவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேராதது, மிகப்பெரும் தவறுதான் என்று கூறினார்.

பிகாரில் லாலு பிரசாத் யாதவ் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சரன் தொகுதியில் வெற்றி பெற்றார். இங்கு இவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் ராஜு பிரதிப் ரூடி போட்டியிட்டார்.

ஆனால் பாடாலிபுத்திரம் தொகுதியில் லாலு பிரசாத் யாதவ் தோல்வி அடைந்தார். இங்கு
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ரஞ்சன் பிரசாத் யாதவ் வெற்றி பெற்றார்.

பிகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முதல்வர் நிதிஷ் குமார் கருத்து தெரிவிக்கையில், லாந்தர் விளக்கு உடைந்துவிட்டது. (லாலு கட்சி சின்னம் ). அதில் இருந்து சிந்திய மண் எண்ணெயினால் மாளிகை தீயில் எரிந்தது. (ராம் விலாஷ் சின்னம் ). அம்பு மட்டுமே சரியான இலக்கை அடைந்துள்ளது (நிதிஷ் குமார்) என்று கூறினார்.

மக்களவை முடிவுகள் பற்றி நிதிஷ் குமார் கருத்து தெரிவிக்கையில், சட்ட மன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பங்கேற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சிதான் மக்களவை தேர்தலின் வெற்றியும். மக்கள் லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோரை நிராகரித்துவிட்டார்கள். எனது அரசுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் அமைதி, மதநல்லிணக்கம், வளர்ச்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.

பிகாரில் தோல்வி அடைந்தாலும், மதசார்பற்ற கட்சி ஆட்சிக்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.

ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான கட்சிகள், பல மாநிலங்களில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது தடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ராம்விலாஸ் பஸ்வான் ஹாஜிபுர் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ராம் சுந்தர் தாஸ் இடம் தோல்வி அடைந்தார்.


வெப்துனியாவைப் படிக்கவும்