பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு வரும் 22-ஆம் தேதி சென்னையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்- ஆசிரியைகள், சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் 22-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள கலந்தாய்விற்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த கலந்தாய்வு ஒருநாள் மட்டுமே நடைபெறும் என்றும், புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை, மேல்நிலைப்பள்ளிகள் இணை இயக்குனர் எஸ்.கார்மேகம் வழங்குவார் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்படுவது நிறுத்தப்பட்டு, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வது என்று தமிழக அரசு முடிவு செய்தது.
இதன்படி பணி மூப்பு அடைப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 1079 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.