தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் நடத்தி வரும் அஞ்சல் வழி சித்த மருத்துவ பட்டயப்படிப்பு ரத்து செய்யப்படுவதாக அப்பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், அஞ்சல் வழி சித்த மருத்துவ பட்டயப்படிப்பை ரத்து செய்து அறிவித்துள்ளார்.
அஞ்சல் வழி சித்த மருத்துவ பட்டய படிப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடைவிதித்த உயர் நீதிமன்றம், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் அனுமதியில்லாமல் மருத்துவம் தொடர்பான படிப்பை யாரும் தொடங்க கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த வழக்கு முடிவதற்கு முன்னர் இந்தப் படிப்பு ரத்து செயப்பட்டுவிட்டது.