அபிநவ் பிந்தராவுக்கு முனைவர் பட்டம்!

பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபிநவ் பிந்த்ராவின் சாதனையை பாராட்டி, அவருக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

சென்னை அருகே உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் 4-ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்லானா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

அண்மையில் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு, இவ்விழாவில் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ முனைவர் பட்டம் அளிக்கப்பட்டது. முன்னதாக இஸ்ரோ தலைவரும், விஞ்ஞானியுமான மாதவன் நாயருக்கு முனைவர் பட்டத்தை ஆளுநர் பர்னாலா வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் பொறியியல், மருத்துவம், செவிலியர் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 2 ஆயிரத்து 615 மாணவ-மாணவிகள் இளநிலை பட்டம் பெற்றனர். இதேபோல் 833 மாணவ-மாணவிகளுக்கு முதுநிலை பட்டங்கள் அளிக்கப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்