இந்தியத் தொழில் கூட்டமைப்பும் (C.I.I.), இஸ்ரோவும் (ISRO) இணைந்து பெங்களூரு நகரில் விண்வெளித்துறை தொடர்பான கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளன.
வரும் நவம்பர் மாதம் 29-ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி வரை 'பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ ((B.S.X.) 2008' என்ற பெயரில், பெங்களூரு சர்வதேச பொருட்காட்சி மையத்தில் (பி.இஅ.இ.சி.) இது நடைபெறவுள்ளது.
விண்வெளி ஆய்வுகளின் போது பயன்படுத்தப்படும் நவீன கருவிகள், உபகரணங்கள், தயாரிப்புகள் உள்ளிட்டவை இந்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்படும் என்று, இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
கண்காட்சி நடைபெறும் அதே தினத்தில் 'உலக விண்வெளி- வர்த்தகம்' என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச மாநாடும் அங்கு தொடங்குகிறது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி, தொழில்துறை வல்லுனர்கள் இதில் பங்கேற்கின்றனர்.