இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி!

வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (13:54 IST)
தா‌‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட, பழங்குடியின வகுப்பை‌ச் சேர்ந்த 10ஆ‌ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்க மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி, ஆங்கிலக் கணிதம், பொது அறிவு, ஆங்கிலம் பேசும் பயிற்சி ஆகியவற்றில் 11 மாதங்களுக்கு இ‌ந்த ப‌யி‌ற்‌சி அளிக்கப்படும். தங்கும் இடம், உணவை பயிற்சி பெறுபவர்கள் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.

இது ப‌ற்‌றிய மேலும் விவரங்களுக்கு துணை மண்டல வேலை வாய்ப்பு அலுவல‌ர், தா‌‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட, பழங்குடியின‌ரு‌க்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையம், எ‌ண்.56, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-600 004 எ‌ன்ற முக‌வ‌ரி‌யி‌ல் நேரிலோ அ‌ல்லது 044-24615112 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்