இடைநிலை ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வு தொடங்கியது

செவ்வாய், 15 ஜூலை 2008 (11:49 IST)
சென்னை: இடை நிலை ஆசிரியர் பயிற்சியில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று தொடங்கியது.

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர் கல்விப் பயிற்சி இயக்குனர் வசுந்தரா தேவி தலைமையில் பொதுக் கலந்தாய்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதேபோல் மாணவிகளுக்கான கலந்தாய்வு வேப்பேரி கிறிஸ்தவ கல்வியியல் கல்லூரியில், துணை இயக்குனர் ராஜபாண்டியன் தலைமையில் நடந்தது. இது தவிர திருவல்லிக்கேணி உட்பட மேலும் 6 இடங்களில் கலந்தாய்வுகள் நேற்று தொடங்கின.

வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கலந்தாய்வில், மொத்தம் உள்ள 24 ஆயிரத்து 382 இடங்களுக்கு 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

கலந்தாய்ய்வு குறித்து இயக்குனர் வசந்தி கூறுகையில், அதிக மதிப்பெண்கள் பெற்று விண்ணப்பித்த மாணவர்களில் பலர், பொறியியல் பாடத்தில் சேரும் எண்ணத்தில் ஆசிரியர் பயிற்சிக்கான கலந்தாய்விற்கு வரவில்லை என்றார்.

ஆடவர்களுக்கு உள்ள இட ஒதுக்கீட்டிற்கு குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் வந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்