ஐ.ஐ.டி.-கேம்பிரிட்ஜ் பல்கலை. ஒப்பந்தம்!

வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (10:49 IST)
மும்பை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான கல்விகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றிற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி முதலில் நேனோ விஞ்ஞானம் கவனம் பெறவுள்ளது. மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் பரிமாற்றம், இருதரப்பு கல்விமுறைகள் ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலை பேராசிரியர் ஆலன் வின்டில், மும்பை ஐ.ஐ.டி. இயக்குனரும் பேராசிரியருமான அஷோக் மிஸ்ரா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி கேம்பிரிட்ஜ் ப‌ல்கலைக் கழகத்தில் 3 ஆண்டுகள் பி.ஹெச்.டி ஆராய்ச்சி செய்முதலில் 10 மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்