மே 10ஆ‌ம் தே‌தி அகில இந்திய கேட்டரிங் நுழைவுத் தேர்வு!

வியாழன், 10 ஏப்ரல் 2008 (11:20 IST)
நாடு முழுவதும் 23 நகரங்களில் உள்ள கேட்டரிங் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு மே மாத‌ம் 10ஆ‌ம் தேதி நடைபெறுகிறது.

4 ஆயிரம் இடங்களுக்கு இந்த நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. கடந்த ஏப்ரலில் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கலாம்.

வரும் ஜூலை 1ஆம் தேதி 22 வயதுக்கு உள்பட்டோரே தேர்வை எழுதலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு வயது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவம், குறிப்பேடு ஏப்ரல் 10ஆம் தேதி வரை இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், சி.ஐ.டி. கேம்பஸ், தரமணி, சென்னை எ‌ன்று முகவ‌ரி‌யி‌ல் ‌‌வி‌நியோக‌ம் செ‌ய்ய‌ப்படு‌கிறது.

பகுதி நேரப் படிப்பாக பி.இ., பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஏப்ர‌ல் 11ஆ‌ம் தே‌தி முதல் வழங்கப்படுகின்றன. மே 6ஆம் தேதி வரையில் இவை வழங்கப்படும்.

கோவை, சேலம், திருநெல்வேலி, பர்கூர் அரசினர் பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பகுதிநேரப் படிப்பாக நடத்தப்படுகிறது.

விண்ணப்பப் படிவங்களை நேரடியாக ரூ.300 கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது அத்தொகைக்கு Secretary, part time BE Admissions 2008-09, Coimbatore என்ற பெயரில் டி.டி. எடுத்து அனுப்பி படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

நிரப்பிய படிவங்களை செயலர், பகுதிநேர பி.இ. அட்மிஷன், கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை -641 014 எ‌ன்று முகவ‌ரி‌க்கு மே 6ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்