உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது.
1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும். தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்தும் குடித்து வரவும்.
அரிசி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும். பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம். உயர் கலோரி தின்பண்டங்களான ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்புகள், வெண்ணெய், நன்றாக சமைக்கப்பட்ட உணவு, ஆகியவைகளை தவிர்க்கவும்.
தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும். அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள்.