முளைக்கீரை உணவுக்குச் நல்ல சுவையூட்டுவது மட்டுமல்லாமல் பசியையும் தூண்டுகிறது. முளைக்கீரையை நன்கு கழுவிச் வெங்காயம், புளி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவை சேர்த்து வேக வைத்துக் பின்பு கடைந்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல்சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் ஆகிய நோய்கள் குணமாகும். அதோடு கண்ணும் குளிர்ச்சியடையும்.
முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவதால், சொறி, சிறங்கு முதலிய நோய்கள் குணமாகின்றன. இந்தக் கீரை வெப்ப சுரத்தைத் தணிக்கிறது. முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் குணமாகும்.
முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும். முளைக் கீரைச் சாற்றில் உளுந்தம் பருப்பை ஊறவைத்து அதை அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.
முளைக்கீரையானது சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மூளை கீரை கண் எரிச்சல், கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். இருமல், தொண்டைப்புண் போன்றவற்றையும் குணமாக்கும்.