பல மருத்துவ பயன்கள் நிறைந்து காணப்படும் தேன் !!

சனி, 12 பிப்ரவரி 2022 (13:42 IST)
தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஆரோக்கியமான கலவைகள் உள்ளன. ஒரு தேக்கரண்டி அல்லது 21 கிராம் தேனில் 64 கலோரிகளும் 16 கிராம் சர்க்கரையும் உள்ளன.


தேன் மற்றும் நீர் கலந்த கலவையில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன.இதனால் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது.

வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் உடலில் அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

வெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்து குடித்து வந்தால் தொண்டையில் உள்ள புண், வரட்டு, இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்.

தினமும் தேன் குடிப்பதால் செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி செரிமான மண்டலம் சீராக இயங்குவதற்கு  உதவுகிறது.

தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால்  உடலிலுள்ள இரத்தத்தை  சுத்தப்படுத்துவதற்கு உதவுகிறது.

வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து தினமும் தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

தேன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்திகளைக் கொண்டிருக்கக்கூடும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, அவை மூளைக்கு பயனளிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்