கரிசலாங்கண்ணி கீரை வயல் வரப்புகளிலும், வயக்கால் ஓரங்களிலும் மற்றும் நீர்ப்பிடிப்புள்ள இடங்களிலும் வளரக்கூடியது. இச்செடியின் காம்புகள் சிவப்பாக இருக்கும். இலைகள் சுரசுரப்பாகவும் நீண்டும் காணப்படும். இதன் பூக்கள் வெள்ளையாக இருக்கும்.
கரிசலாங்கண்ணி கீரையை துவையலாகவும், பருப்புடன் சேர்த்து கூட்டாகவும் செய்து சாப்பிடலாம். இக்கீரை கல்லீரலுக்கு அதிக சக்தியை கொடுக்க கூடியது. கரிசலாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் பிரகாசம் அடையும் மற்றும் கண்களுக்கும் மூளைக்கும் நல்ல குளிர்ச்சியை தரும்.