தக்காளியானது வறட்சியான தோல் உடையவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தொடர்ந்து உணவாக எடுத்துக் கொண்டாலோ, முகம், கை, கால்களில் வெளிப்புறமாக அப்ளை செய்தாலோ சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மேம்படும்.
தக்காளியை ஊறுகாய், குழம்பு, பச்சடி, தொக்கு எனப் பல வகையாக சாப்பிட்டாலும், உடல் எடையினைக் குறைக்க நினைப்போர் தக்காளியைப் பச்சையாக எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். தக்காளியில் உள்ள நீர்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பினைக் குறைப்பதாக உள்ளது.