பெயரை மாற்றிய எடியூரப்பா ! – நியுமராலஜிதான் காரணமா ?

சனி, 27 ஜூலை 2019 (08:52 IST)
கர்நாடகாவில் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பா தனது பெயரை நியுமராலஜிப்படி மாற்றியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் முதல்வராக இருந்த குமாரசாமியின் ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து பாஜக ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். அதனை அடுத்து நேற்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் எடியூரப்பா. அவரது அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் பொறுப்பை ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புக்கனெகெரெ சித்தலிங்கப்பா எடியூரப்பா என்ற தனது முழுப் பெயரை 2007 ஆம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்ற போது பி எஸ் எடியூரப்பா (B S yeddyurappa) என ஆங்கில மாற்றிக்கொண்டார். ஆனால் அவர் அப்போது வெறும் 7 நாட்களே பதவி வகித்தார். அதன் பின்னர் பதவியேற்றக் காலங்களிலும் அவர் முழுமையாக பதவி வகிக்கமுடியவில்லை. இதனால் இந்த முறை நியுமராலஜிப்படி மீண்டும் B S yediyurappa என மீண்டும் மாற்றிக்கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்