இந்நிலையில், 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் இடம் பெற உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார வல்லுநர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார்.