இதைய என்ன பண்றது…? ரூ.45 ஆயிரம் போனை அபேஸ் செய்தவர்…திருப்பிக் கொடுத்த சம்பவம் !

செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (16:20 IST)
ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள திறன்பேசியை பயன்படுத்தத் தெரியாக காரணத்தால அதன் உரிமையாளரிடமே திருடர்  திரும்ப ஒப்படைத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு நபர் தனது ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ஒரு கடையில் வைத்துவிட்டு வந்துள்ளார். திரும்பி அங்குச் சென்று பார்த்தபோது   போனைக் காணவில்லை. மீண்டும் பேக்கரிக்குச் சென்று விசாரித்துள்ளார். போன் கிடைக்கவில்லை போன் திருட்டு போனதாக நினைத்தார்.

இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அதே நபர் செல்போனில் அழைத்து தனக்கு இந்தப் போனைப் பயன்படுத்தத் தெரியவில்லை எனவே அதைத் திரும்பத் தருவதாகக் கூறியுள்ளார்.

போலீஸார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்