மீண்டும் தொடரும் சரிவு: பங்குச்சந்தையில் என்னதான் நடக்குது?
புதன், 29 ஜூன் 2022 (09:32 IST)
பங்குச்சந்தை ஒரு நாள் ஏற்றத்தில் இருந்தால் நான்கு நாள் இறக்கத்தில் இருப்பதால் அதில் முதலீடு செய்தவர்கள் கடந்த சில மாதங்களாக பெரும் அச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை ஏற்றத்தில் இருந்தபங்குச் சந்தை நேற்று ஏற்ற இறக்கம் இன்றி சமநிலையில் முடிந்தது
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே சரிவைக் கண்டுள்ளது
சற்றுமுன் வரை மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிந்துள்ளது என்பதும் தற்போது 52724 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 137 புள்ளிகள் சரிந்து 15713 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது