இந்திராகாந்தி மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்டதால் 3 பேர் பலி - அதிர்ச்சி வீடியோ

வியாழன், 2 நவம்பர் 2017 (16:48 IST)
புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி மருத்துவமனையில் திடீரெனெ மின்சாரம் தடைபட்டதால் 3 நோயாளிகள் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கடந்த வாரம் இந்த மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவில் சில நோயாளிகள் அனுமதிக்கப்படனர். அதில் சிலருக்கு மருத்துவர்கள் டயாலிசிஸ் சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது திடீரென மின்சாரம் தடை பட்டது. அதில், மூன்று நோயாளிகள் மரணமடைந்தனர். இதனால், நோயாளிகளின் உறவினர்கள் அதிர்ச்சியில் ஓலமிட்டி அழுது புலம்பினர். 

மேலும், பலர் ஆத்திரத்தில் அங்கிருந்த மருத்துவர்களிடமும், ஊழியர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
இந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்