அக்டோபரில் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை உச்சமடையும் எனவும் மூன்றாம் அலையின் போது இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு உச்சத்தின் போது ஒரு லட்சத்துக்கு குறைவாக தொற்றுகளே பதிவாகும். இதுவே மிகவும் மோசமான நிலையில், அதிகபட்சமாக தினசர பாதிப்பு ஒன்றரை லட்சமாக பதிவாகக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எதிர்பார்க்கப்படும் மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு கடுமையான கொரோனா பாதிப்பு ஏற்பட சாத்தியமில்லை. குழந்தைகள் பாதிக்கப்படப் போகிறது என்பதற்கு எந்தத் தரவும் இல்லை, ஏனெனில் குழந்தைகளுக்கு உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.