ஹைதாராப் நகரில் ஒரு காரில் லிப்ட் கேட்டு ஏறிய பெண் தனது ஆடைகளை கிழித்துக் கொண்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக போலீஸில் புகார் அளித்தால் உனக்கு தண்டனனை கிடைக்கும் என ஓட்டுனரிடம் கூறி, பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், பலாத்கார நாடகம் நடத்தி பலரை மிரட்டி பணம் பறித்துள்ளதாகவும், பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது