தெலங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. எனவே ஆளுங்கட்சியான முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்டன.
அதில், காங்கிரஸ் 64 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. பாரதிய ராஷ்டிரிய சமிதி 39 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வென்றன.
இந்த நிலையில், வரும் 7 ஆம் தேதி தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்கவுள்ளார். காங்கிரஸ் எம்.எக்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக ரேவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.