சமீபத்தில் ஐந்து மாநில தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் நான்கு மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் தெலுங்கானா தவிர மத்திய பிரதேசம் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி தோல்வி அடைந்து காங்கிரஸ் கட்சி முதல் முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக நான்கு மாநில தேர்தல் முடிவு வந்துள்ளது என்றும் இந்தியா கூட்டணியின் பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று தெரிவித்தார். 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.