தெலுங்கானா மாநிலத்தின் முலுகு பகுதியில் ஒருவர் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது அந்த பகுதிக்கு மது அருந்தி விட்டு வந்த நபர் ஒருவருக்கும் பொக்லைன் டிரைவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பணி செய்யும் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டு இடையூறு செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் பொக்லைனால் தோண்டும் முன்பகுதியை கொண்டு போதை ஆசாமியை இடித்து தள்ளியுள்ளார்.
இந்த சம்பவத்தை படம் பிடித்த சிலர் சமூக வலைதளங்களில் அதை பகிரவும், இதுகுறித்து தாக்க்ய டிரைவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் ஆசாமி மது அருந்தி விட்டு இடையூறு செய்தததாக டிரைவர் கூறியுள்ளார்.