உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த சவுகத் அலி என்பவரின் மகளான ஷப்னம் அலி, தனது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் குடும்பத்தினர் அனைவரையும் காதலனின் உதவியோடு கொலை செய்தார். 2008 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் ஒரு பத்து மாதக் குழந்தையும் அடக்கம்.
இதையடுத்து ஷப்னம் அலி மற்றும் அவர் காதலர் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. மேல் முறையீட்டிலும் அந்த தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இப்போது ஷப்னம் அலி தனது தூக்கு தண்டனையை எதிர்நோக்கி உள்ளர். இந்தியாவிலேயே பெண்களை தூக்கில் போடும் வசதி மதுரா சிறையில் மட்டும்தான் இருக்கிறது. கடந்த சில நாட்களாக தூக்கிலிடு பணியாளர் பவான் ஜல்லாத் அந்த இடத்தை மேற்பார்வையிட்டு அதில் சில மாற்றங்களை செய்ய சொல்லியுள்ளாராம். அதனால் ஷப்னம் அலி விரைவில் தூக்கில் போடப்படுவார் என சொல்லப்படுகிறது.