பிபிசி வருமான வரி சோதனை: 2வது நாளாக தொடர்வதால் பரபரப்பு..!

புதன், 15 பிப்ரவரி 2023 (12:09 IST)
நேற்று டெல்லி மற்றும் மும்பை பிபிசி அலுவலங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில் இந்த சோதனை தற்போது இரண்டாவது நாளாக இன்றும் தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
சுமார் 60 முதல் 70 அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகவும் இந்த சோதனையில் ஒரு சில ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்றுக்குள் சோதனை முடிவடையுமா அல்லது நாளையும் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இது குறித்த தகவலை தெரிவிக்க வருமானவரித்துறையினர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 
 
மும்பை மற்றும் டெல்லி பிபிசி அலுவலகங்களில் நடந்து வரும் சோதனைக்கு பிரஸ் கிளப் ஆப் இந்தியா உள்பட பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன என்பதும் இருப்பினும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்