நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ் பி ஐ அறிவித்துள்ள புதிய அறிவிப்பு பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. 3 மாதத்துக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எஸ் பி ஐ யில் புதிதாக பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.