எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு: நாடு முழுவதும் மாதிரி தேர்வு..!
வியாழன், 6 ஜூலை 2023 (14:43 IST)
2024-25 கல்வியாண்டு முதல் நெக்ஸ்ட் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 28ம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்த கல்வியாண்டு முதல் அமலாகிறது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்,.
இந்த நிலையில் நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பயிற்சி மருத்துவர் பணியை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜூலை 28ம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.